மின்சாரம் தாக்கி மயில் சாவு


மின்சாரம் தாக்கி மயில் சாவு
x

திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் தாக்கி மயில் இறந்தது

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவில் வசிப்பவர் சேகர்(வயது 50). இவர் வீட்டின் மாடியில் ஒரு ஆண் மயில் இறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சேகர் உடனடியாக மாவட்ட வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் மாவட்ட வன அலுவலர் அறிவொளி, மன்னார்குடி சரக வன அலுவலர் கோமதி, திருத்துறைப்பூண்டி வன அலுவலர் தனலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த மயில் உடலை ஆய்வு செய்தனர். அப்போது மயில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மயில் தேசிய பறவை என்பதால் மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி அதன் உடலை வீட்டின் உரிமையாளர் சேகர் வன அலுவலரிடம் ஒப்படைத்தார்.


Next Story