110 கிலோமீட்டர் வேகத்தில் மின்சார ரெயிலை இயக்கி சோதனை
வேளாங்கண்ணி- நாகை இடையே 110 கிலோமீட்டர் வேகத்தில் மின்சார ரெயிலை இயக்கி நாளை சோதனை நடக்க உள்ளது.
வேளாங்கண்ணி- நாகை இடையே 110 கிலோமீட்டர் வேகத்தில் மின்சார ரெயிலை இயக்கி நாளை சோதனை நடக்க உள்ளது.
வேளாங்கண்ணி- நாகை ரெயில் பாதை
நாகை- வேளாங்கண்ணி அகல ரெயில் பாதை சுமார் 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த ரெயில் பாதை கடந்த 2010-ம் ஆண்டு 20-ந்தேதி பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த நிலையில் திருச்சி- காரைக்கால் வரை ரெயில் பாதைகள் மின் மயமாக்கும் பணிகள் நடைபெற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாகை-வேளாங்கண்ணி இடையேயான ரெயில் பாதையும் மின்மயமாக்க திட்டமிடப்பட்டு அனைத்து பணிகளும் நடந்து முடிந்து விட்டது.
சோதனை
இதையடுத்து கடந்த 20- ந்தேதி ரெயில்வே தெற்கு மண்டல பாதுகாப்பு ஆணையர் அபேகுமார் ராய், மண்டல மேலாளர் மனிஷ் அகர்வால் ஆகியோர் தலைமையில் 50 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவினர் வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் டீசல் என்ஜினை இயக்கி சோதனை செய்தனர்.
மின்சார ரெயில் சோதனை
அதேபோல இதே வழிதடத்தில் மின்மயமாக்கல் பணியானது முடிந்து விட்டதால், மின்சார ரெயில் என்ஜினை கொண்டு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி ரெயில்வே மின் மயமாக்கல் பணி பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர்.
நாளை (திங்கட்கிழமை) காலை 10:30 மணி அளவில் நடக்கும் இந்த சோதனையில், மின் கம்பிகளின் உயரம், ரெயிலின் வேகம், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
...