அரசு மருத்துவமனைகளுக்கு மின்கலன் வசதியுடன் கூடிய சக்கர நாற்காலிகள்


அரசு மருத்துவமனைகளுக்கு மின்கலன் வசதியுடன் கூடிய சக்கர நாற்காலிகள்
x

திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனைகளுக்கு மின்கலன் வசதியுடன் கூடிய சக்கர நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் மற்றும் வேட்டவலம் இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைகளுக்கு மின்கலன் வசதியுடன் கூடிய 3 சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ரெட்கிராஸ் சங்கத் தலைவர் இந்திரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார்.

துணை தலைவர் மண்ணுலிங்கம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கீழ்பென்னாத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், வேட்டவலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் என தலா ஒரு மின்கலன் வசதியுடன் கூடிய சக்கர நாற்காலிகளை வழங்கினார்.

அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி உள்பட டாக்டர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story