மின்சார உதவி பொறியாளர்கள் பணியிட மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மின்சார உதவி பொறியாளர்கள் பணியிட மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

காட்பாடியில் மின்சார உதவி பொறியாளர்கள் பணியிட மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

காட்பாடியில் அரசு விழாவின் போது மின்தடை ஏற்பட்டது தொடர்பாக மின்வாரிய உதவி பொறியாளர்கள் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து காட்பாடியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வேலூர் கிளை தலைவர் தருமன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் கோவிந்தராஜ், தமிழ்நாடு பவர் என்ஜினீயர்ஸ் ஆர்கனைசேஷன் மாநில செயலாளர் கோபிநாத், நிர்வாகிகள் தாமோதரன், ஜெகன், ரவி உள்பட பலர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மூன்று சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் அசோக்குமார் நன்றி கூறினார்.


Next Story