மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது
தஞ்சாவூர்;
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சை நகர பொதுமக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. எனவே தஞ்சை தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ்கார்னர், அருளானந்தநகர், பர்மாகாலனி, நிர்மலாநகர், யாகப்பாநகர், அருளானந்தம்மாள்நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காந்திஜிசாலை, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகுமான்நகர், ரெட்டிப்பாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யாநகர், மேலவெளி ஊராட்சி, தமிழ்ப்பல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கடநகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திராநகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.