மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல்:133 பேர் கைது
தூத்துக்குடியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 133 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் பணிநிரந்தரம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 133 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அனல்மின் நிலையங்களில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தூத்துக்குடி திட்ட தலைவர் மரியதாஸ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தை சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தொடங்கி வைத்தார்.
கைது
தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட துணைத் தலைவர் ரவி தாகூர், மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட செயலாளர் குன்னி மலையான், தெர்மல் அனல் நிலைய திட்டச் செயலாளர் கணபதி சுரேஷ், திட்ட தலைவர் கென்னடி, திட்ட பொருளாளர் ராமையா உள்பட அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த மத்தியபாகம் போலீசார் றியலில் ஈடுபட்ட 133 பேரை கைது செய்தனர்.