புதுப்பேட்டை பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்
புதுப்பேட்டை பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடலூர்
பண்ருட்டி,
பண்ருட்டி பூங்குணம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான அங்கு செட்டிபாளையம், திருவாமூர், சேமக்கோட்டை, விசூர், கருக்கை, மணலூர், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசபாளையம் பக்கிரிபாளையம்,
தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு, ஏரிப்பாளையம், தட்டாம் பாளையம், மாளிகைமேடு, புதுப்பேட்டை மற்றும் பண்டரக்கோட்டை, கொண்டா ரெட்டிபாளையம், வ.உ. சி. நகர், ஆர். எஸ்.மணி நகர், பாரதி நகர், ரெயில்வே காலனி, சாமியார் தர்கா, புதுநகர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை பண்ருட்டி மின்வாரிய அலுவலக செயற் பொறியாளர் எஸ். பழனி ராஜூ தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story