விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை
திருவண்ணாமலையில் விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தந்தை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 46), எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
சிவராஜ் குடிபழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்த அவர் கடந்த 11-ந் தேதி விஷத்தை குடித்துவிட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story