போக்சோ சட்டத்தில் எலக்ட்ரீசியன் கைது


போக்சோ சட்டத்தில் எலக்ட்ரீசியன் கைது
x

பட்டுக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை

மதுக்கூர் அருகே உள்ள அண்டமி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்ற ரெங்கதுரை(வயது40). எலக்ட்ரீசியனான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.இது குறித்து சிறுமியின் பெற்றோர் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாஸ்கர் என்கிற ரெங்கதுரையை கைது செய்து தஞ்சையில் உள்ள போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story