சின்னமனூர் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
சின்னமனூர் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்.
தேனி
சின்னமனூர் அருகே சீலையம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 42). எலக்ட்ரீசியன். இவர் நேற்று மாலை சீலையம்பட்டியில், கோட்டூர் சாலையில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் தோட்ட பகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள டிரான்ஸ்பார்மர் கம்பியை அவர் தெரியாமல் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கிவீசப்பட்ட ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ராஜபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story