மொபட்டில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் சிகிச்சை பலனின்றி சாவு


மொபட்டில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் சிகிச்சை பலனின்றி சாவு
x

மொபட்டில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

அரியலூர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 47), எலக்ட்ரீசியன். இவர் கடந்த ஒரு மாதமாக அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழவண்ணம் கிராமத்தில் உள்ள தனது நண்பர் சின்னத்தம்பியின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மொபட்டில் சென்றபோது கீழே விழுந்து தலை மற்றும் கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய காயம் தான் என எண்ணி டாக்டரிடம் காட்டி ஊசி மட்டும் போட்டுக் கொண்டு இருந்துள்ளார். பின் அடுத்த சில நாட்களில் தலை மற்றும் மார்பில் வலி ஏற்பட்டதால் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். பின் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story