எலக்ட்ரீசியனுக்கு அரிவாள் வெட்டு
எலக்ட்ரீசியனுக்கு அரிவாள் வெட்டு
அவினாசி
அவினாசியை அடுத்துரங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 29). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பகவதி (24). சந்தோஷ்குமாருக்கும், இவருக்கும் அவினாசியை அடுத்த குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் (32) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சந்தோஷ் குமார் ரங்கா நகர் அருகே சுரேசிடம்தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேஷ்தான் பையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து சந்தோஷ்குமாரை வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சந்தோஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வருகிறார்கள்.