கயத்தாறு ஐஸ்கம்பெனியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
கயத்தாறு ஐஸ்கம்பெனியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
கயத்தாறு:
கயத்தாறில் ஐஸ்கம்பெனியில் குளிர்சாதனத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த எல்க்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.
எலக்ட்ரீசியன்
ஓட்டப்பிடாரம் தாலுகா கீழக்கோட்டை மேலத்தெருவில் வசித்து வருபவர் கோமதி. இவரது மகன் முருகேசன் (வயது 40). எலக்ட்ரீசியன். இவர் நேற்று காலையில் கயத்தாறிலுள்ள ஐஸ் கம்பெனியில் உள்ள குளிர்சாதனத்தில் ஏற்பட்ட பழுதை நீக்க சென்றார். அங்கு குளிர்சாதனத்தில் பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவர் மீது தீடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கி விழுந்தார். கம்பெனியின் இருந்தவர்கள் அவரை மீட்டு திடீரென அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் விரைந்து சென்று அவரை உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மாசீனிவாசன், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இறந்து போன முருகேசனுக்கு சரஸ்வதி(32) என்ற மனைவியும், பரிஸ்கோபி( 11), மதிவாணன்(9) ஆகிய 2 மகன்களும், சுஷ்மிகா (7) என்ற ஒரு மகளும் உள்ளனர். மின்சாரம் தாக்கி எல்கட்ரீசியன் பலியான சம்பவம் கீழக்கோட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.