எலக்ட்ரீசியனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


எலக்ட்ரீசியனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x

எலக்ட்ரீசியனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம், திருமழபாடியை சேர்ந்தவர் அருண்ராஜ்(வயது 42). எலக்ட்ரீசியனான இவர் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிளஸ்-2 மாணவியை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அருண்ராஜிடம் அந்த மாணவியின் தாய் கேட்டபோது, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருண்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட அருண்ராஜுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


Next Story