நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
ஓசூர், மத்திகிரி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
ஓசூர்:
ஓசூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, ஓசூர் காமராஜ் காலனி, அண்ணா நகர், எம்.ஜி. ரோடு, பஸ் நிலையம், அலசநத்தம், நரசிம்மா காலனி, ராம்நகர், ஸ்ரீநகர், நியூ ஹட்கோ, அப்பாவு நகர், முனீஸ்வர் நகர், துவாரகா நகர், மத்தம், டைட்டான் இண்டஸ்ட்ரீஸ், அசோக் லேலண்ட், சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), ஆனந்த நகர், சாந்தபுரம், அரசனட்டி, பிருந்தாவன் நகர், சூர்யா நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், டி.வி.எஸ் நகர், அந்திவாடி மற்றும் மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், காடிபாளையம், குதிரே பாளையம், பழைய மத்திகிரி, எடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகொண்டபள்ளி, பொம்மாண்டபள்ளி மற்றும் சுற்று பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை ஓசூர் மின் வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் தெரிவித்துள்ளார்.