நாளை மின்சாரம் நிறுத்தம்
ஜூஜூவாடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் கோட்டம் ஜூஜூவாடி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுதல் உயர் மின்னழுத்த மின் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ஜூஜூவாடி, மூக்கண்டபள்ளி, பேடரபள்ளி, தர்கா, பேகேபள்ளி, சின்ன எலசகிரி, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1 லிருந்து சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், காமராஜர் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லே அவுட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை ஓசூர் மின் வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story