மின்வாரிய ஊழியர் கைது


மின்வாரிய ஊழியர் கைது
x

பெண்ணிடம் நகை, பணம் மோசடி செய்ததாக மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே மேட்டு பிராஞ்சேரி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (வயது 40). இவர் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த குமார் (48) என்பவர் தன்னிடம் பணம் மற்றும் தங்க நகைகளை வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், குமாரை கைது செய்தனர். கைதான குமார், கூடங்குளத்தில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story