மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கள்ளக்குறிச்சியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மின்சார செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் அனைத்து மின் துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் தலைவர் ரங்கசாமி தலைமை தலைமை தாங்கினார். அகவிலைப்படியை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் .மின்துறை அலுவலர்கள், ஊழியர்கள் வேலைக்கு செல்லாமல் 300-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மின்சார சீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.
Related Tags :
Next Story