மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2022 1:36 AM IST (Updated: 27 Sept 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

மதுரை

புதூர்

மதுரை புதூர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அகவிலைப்படி உயர்வினை உடனே வழங்க வேண்டும், 50 ஆயிரம் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், பணி ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த கூடாது, மின் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை தனியார்களுக்கு வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் என 100-க் கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின்வாரிய கூட்டமைப்பு சங்க மாநில துணைத்தலைவர் ராஜாங்கம் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஏற்கனவே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் அமல்வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இதில் புதூர் வீரமுத்து, கோபால், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் நேற்று இரவிலும் தொடர்ந்தது.


Next Story