மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டம்


மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டம்
x

பாளையங்கோட்டையில் மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 1-12-2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். மின்சார வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். துணை மின் நிலையங்களில் அவுட் சோர்சிங் உத்தரவை உடனே வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி மின்சார வாரிய ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் குறித்த விளக்க வாயிற் கூட்டம் பாளையங்கோட்டை மின்சார வாரிய அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. மின்சார தொழிலாளர்கள் சம்மேளன செயலாளர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். இதில் மின்சார தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் கண்ணன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கருப்பசாமி, சி.ஐ.டி.யு. மாநில துணைச்செயலாளர் வண்ணமுத்து, எம்பிளாய் பெடரேசன் நிர்வாகி பாலசுப்பிரமணியன், டாக்டர் அம்பேத்கர் எம்பிளாய் யூனியன் நிர்வாகி சிவகுமார், ஐக்கிய சங்க நிர்வாகி தென்கரைமகாராஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். முடிவில் சி.ஐ.டி.யு. செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.


Next Story