மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டம்


மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டம்
x

காட்பாடியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

வேலூர்

சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் காட்பாடி காந்திநகரில் உள்ள மேற்பார்வை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். நுழைவு வாயில் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அறிவித்தபடி தினக்கூலி ரூ.380 அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடந்தது.


Next Story