மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
அரக்கோணத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை
அரக்கோணம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் அருகே மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை, பல ஆண்டுகளாக பணியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் காண வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக்கூலியாக வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story