சென்னையில் மின் வெட்டு ஏற்பட்டது ஏன் ? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
சீரான மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
சென்னை,
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது ,
"தமிழ்நாடு முழுவதும் மின் தேவை கடந்த 2 ஆண்டுகளில் மிக அதிகமாகியுள்ளது.2020 - 21 இல் மின் நுகர்வு 16,481 மெகாவாட் .ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் 19,387 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக ஒரு சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தேவைக்கு ஏற்ப புதிய மின்மாற்றிகள் 13 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
மின்சாரத்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை. சென்னையில் வரும் காலங்களில் எந்தவித தடையுமின்றி மின்விநோயோகம் செய்ய ஏற்பாடு. திறன் மேம்படுத்த புதிய கேபிள்கள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.சென்னையில் மின் நுகர்வு அதிகம் உள்ள இடங்கள் கணெக்கெடுக்கப்பட்டு மின் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை.
"சென்னையின் மின்தேவை அதிகமாக உயர்ந்துள்ளது, தற்போது 4,016 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.மின்தடை என்பது பராமரிப்புப் பணிகளுக்காக செய்யப்படுவது.தேவைக்கு அதிகமாக மின் விநியோகம் செய்ய மின்சார வாரியம் தயாராக உள்ளது. எந்தவித பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது;.
கடந்த 2 நாட்களில் 4016 மெகாவாட் ஆக மின் நுகர்வு அதிகரித்துள்ளது; 45 நாட்களில் 19,387 மெகாவாட் ஆக அதிகரிப்பு .மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது
சீரான மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.என கூறினார்.