மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்புசெயற்குழு கூட்டம்
தேனியில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பின், வட்டக்கிளை செயற்குழு கூட்டம் நடந்தது.
தேனியில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பின், வட்டக்கிளை செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வட்டக்கிளை தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். திட்ட செயலாளர் மூக்கையா, பொருளாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர் சேக்கிழார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில், ஒப்பந்த தொழிலாளர்கள், 1,000 பகுதிநேர பணியாளர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். விடுபட்ட 5 ஆயிரம் கேங்மேன் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கவும், பயிற்சி காலத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த பணிமுறையை கைவிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஜனவரி 10-ந்தேதி கூட்டுக்குழு முடிவின்படி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.