திண்டுக்கல்லில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல்லில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல்லில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு மின்ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் திண்டுக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார்.

இதில் ஐக்கிய சங்க மாநில நிர்வாகி செய்யது இப்ராகிம், பொறியாளர் சங்க மாநில நிர்வாகி பால்பாண்டி, திட்ட செயலாளர் வானதி, அண்ணா தொழிற்சங்க திட்ட செயலாளர் பாலாஜி பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பஞ்சப்படி உள்ளிட்ட 23 சலுகைகளை பறிக்கும் வாரியஆணையை ரத்து செய்ய வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் ஊதிய உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story