கீழப்பெரம்பலூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


கீழப்பெரம்பலூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

கீழப்பெரம்பலூர் பகுதியில் இன்று (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் கீழப்பெரம்பலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், ஆர்.எஸ்.மாத்தூர், கே.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி மற்றும் கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் குன்னம் பகுதி உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.


Next Story