மின்வாரிய ஓய்வூதியர்கள் அரை நிர்வாண போராட்டம்


மின்வாரிய ஓய்வூதியர்கள் அரை நிர்வாண போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஓய்வூதியர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆண்கள் மேல்சட்டை அணியாமல் வேட்டி, பேண்ட் மட்டுமே அணிந்து கலந்து கொண்டனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இணை செயலாளர் உமாபதி வரவேற்றார். மாநில செயலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். மின்வாரியம் பொதுத்துறை நிறுவனமாக தொடர்ந்து செயல்பட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.



Next Story