மின்வாரிய ஊழியர் தீக்குளித்து தற்கொலை
தேனி அருகே மின்வாரிய ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
தேனி அருகே உள்ள அரண்மனைபுதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமலிங்கம் (வயது 77). மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டில் இருந்தபோது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவருடைய மகள் கமலா பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சோமலிங்கம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story