மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி


மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
x

புதியம்புத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

புதியம்புத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

மின்வாரிய ஊழியர்

தூத்துக்குடி அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 55). இவர் முத்தையாபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மிகை மின் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருடன் மின் ஆய்வாளராக வேலை பார்த்து வந்த ஓட்டப்பிடாரம் இந்திராநகரை சேர்ந்த மாரியப்பன் (53) மற்றும் சிலர் கடந்த 30-ந்தேதி புதியம்புத்தூர் அருகே உள்ள கீழவேலாயுதபுரம் பகுதிகளில் உயர் மின்ஒயர் பாதையில் உள்ள கருவேல மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்ஒயரில் கருவேல மரங்கள் உரசியதால் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரையும் மற்ற ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மாரியப்பன், மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பரிதாப சாவு

இந்நிலையில் நேற்று அதிகாலையில் மாரியப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த மாரியப்பனுக்கு ஆறுமுககனி என்ற மனைவியும் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.


Next Story