அய்யலூர் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் படுகாயம்
அய்யலூர் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் படுகாயம் அடைந்தார்.
திண்டுக்கல்
அய்யலூர் அருகே உள்ள குளத்துப்பட்டி டி.புதூரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 52). இவர் அய்யலூர் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் வெள்ளைச்சாமி நேற்று அய்யலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட வேங்கனூரில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்றில் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் டிரான்ஸ்பார்மரில் இருந்து தூக்கிவீசப்பட்ட வெள்ளைச்சாமி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story