மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி அதன் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க மாநில அரசுகளை நிர்பந்திக்கக்கூடாது. வேலைப்பளு ஒப்பந்த பதவிகளை ரத்து செய்வதற்கு முன் 9ஏ நோட்டீஸ் வழங்கி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவை பறிக்கக்கூடாது. மக்களிடம் விவாதிக்காமல் பிரீபெய்டு முறையில் மின்கட்டணம் வசூல் செய்ய ஸ்மார்ட் மீட்டரை பொருத்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், வட்ட செயலாளர் செல்வராஜ், லால்குடி கோட்ட செயலாளர் சார்லஸ் உள்பட மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.