மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் நான்கு ரோடு அருகே மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மின் துறை தொடர்ந்து பொதுத்துறையாக நீடிக்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பணிமாற்றம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 1.12.2019 முதல் 16.5.2023 வரையிலான காலத்தில் பணியில் சேர்ந்த பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story