சத்தியமங்கலத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் சாவு


சத்தியமங்கலத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் சாவு
x

சத்தியமங்கலத்தில் மின்சாரம் தாக்கி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் மின்சாரம் தாக்கி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளிக்கூட மாணவர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை அன்னையன் கிழக்கு வீதியில் வசித்து வருபவர் பிரேமா (வயது 40). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடம் அருகே எழுதுபொருள் மற்றும் மிட்டாய் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். பிரேமா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவரது ஒரே மகன் பிரவீன் (வயது 14). இவர் தாயுடன் வசித்து வந்தார். கொடிவேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். வரும் கல்வியாண்டில் அவர் 8-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.

மின்சாரம் தாக்கி சாவு

தற்போது கோடை விடுமுறை என்பதால் பிரவீன் தாய்க்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் பிரவீன் சைக்கிளில் சென்று கடையை திறந்துள்ளார்.

அப்போது கடை இருட்டாக இருந்்ததால் அவர் மின் விளக்கை ஆன் செய்துள்ளார். ஆனால் மின் விளக்கு எரியவில்லை. இதனால் மின்சார பிளக்கை சரிசெய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பரிதாபம்

இது பற்றி தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்சாரம் தாக்கி இறந்த மகனின் உடலை பார்த்து தாய் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story