மின்னணு குடும்ப அட்டை சிறப்பு முகாம்
கோவில்பட்டியில் மின்னணு குடும்ப அட்டை சிறப்பு முகாம் நடந்தது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மின்னணு குடும்ப அட்டை தொடர்பான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு தாசில்தார் சுசிலா தலைமை தாங்கினார். தாலுகா வினியோக அதிகாரி நாகராஜன் பொதுமக்களிடம் குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் மாற்றம், புதிதாக உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்கல், நகல் அட்டை பெறுதல், குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளவர்களுக்கு முகாமிலேயே புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகள் தொடர்பான மனுக்களை 34 பேரிடம் பெற்றார். மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை அன்று சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தாசில்தார் சுசிலா தெரிவித்தார்.