மின்னொளி கைப்பந்து போட்டி


மின்னொளி கைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே மின்னொளி கைப்பந்து போட்டி நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே அருணாசலபுரம் கிராமத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு நண்பர்கள் வாலிபால் கிளப் சார்பில் 18-ம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு அருணாசலபுரம் நாடார் மகமைகமிட்டி நாட்டாண்மை கிருஷ்ணசாமி நாடார் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், சங்கரன்கோவில் ஒன்றிய தலைவர் லாலா சங்கர பாண்டியன் ஆகியோர் மின்னொளி கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தனர். மொத்தம் 30 அணிகள் கலந்து கொண்டது. இதில் மடத்தூர் அணி முதல் பரிசையும், மதுரை அணி 2-ம் பரிசையும், சிவகாமிபுரம் அணி 3-ம் பரிசையும், அருணாசலபுரம் அணி 4-ம் பரிசையும் வென்றது. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் செல்லத்துரை, தொழிலதிபர் மதன் சுப்பிரமணியன், அருணாசலபுரம் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம், அரியநாயகிபுரம் பஞ்சாயத்து துணைத் தலைவர் காசி சிவகுருநாதன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகையை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.பி.எம்.அன்பழகன், சேர்ந்தமரம் கிளைச் செயலாளர் முருகன், அரியநாயகிபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் சண்முகவேல் மற்றும் சுற்றுவட்டார ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story