இ-சேவை மையம் திறப்பு


இ-சேவை மையம் திறப்பு
x

பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இ-சேவை மையத்தை அண்ணாதுரை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை முருகன் கோவில் தெரு, சுண்ணாம்புக்கார தெரு சந்திப்பில் எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளது.தமிழக முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவுப்படி எம்.எல். ஏ.அலுவலகத்தில் இ-சேவை மையத்தை அண்ணாதுரை எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதன் மூலம் பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், ரேஷன் கார்டு புதுப்பித்தல், இருப்பிடச் சான்று, சாதி சான்று மற்றும் அரசின் பிற சேவைகளை பெறவும் எம்.எல்.ஏ. அலுவலகம் பொதுமக்களுக்காக செயல் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story