தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கும் விழா


தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கும் விழா
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 2:21 PM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைவர் ஆதிலிங்கம் தலைமை தாங்கி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20லட்சம், சங்க உறுப்பினர்களுக்கு விவசாய கடன் ரூ.10லட்சம், இதர கடன்களாக ரூ.15 லட்சம் என மொத்தம் ரூ.45 லட்சம் கடன் வழங்கினார். இதில் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story