தாளவாடி அருகே குட்டிகளுடன் ரோட்டை கடந்து சென்ற யானைகள்;வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

தாளவாடி அருகே குட்டிகளுடன் ரோட்டை கடந்து சென்ற யானைகள்;வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
x

தாளவாடி அருகே குட்டிகளுடன் யானைகள் வனப்பகுதி ரோட்டை கடந்து சென்றன. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே குட்டிகளுடன் யானைகள் வனப்பகுதி ரோட்டை கடந்து சென்றன. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரோட்டை கடந்த யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தாளவாடி தலமலை வனச்சாலையில் வாகன போக்குவரத்து குறைவாக இருக்கும். இந்த வனச்சாலையை வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வரும் யானைகள் கடப்பதும், சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் வாடிக்கையாகி வருகின்றன.

இந்த நிலையில் தாளவாடியில் இருந்து தலமலை வழியாக திம்பம் செல்லும் ரோட்டில் உள்ள ராமரணை அருகே யானைகள் குட்டிகளோடு கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.

எச்சரிக்கை

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் சாலையோரம் நின்று தீவனங்களை உட்கொண்டு விட்டு சாலையைக் கடக்கும். குட்டிகளுடன் செல்லும் காட்டுயானைகள் ஆக்ரோஷத்தோடு மனிதர்களை தாக்க வாய்ப்பு உள்ளது. எனவே சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் வனச்சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் தங்கள் வாகனங்களை இயக்க வேண்டும்' என்றனர்.

Next Story