Normal
கடம்பூர் அருகே உள்ள கிராமத்துக்குள் புகுந்த யானை
கடம்பூர் அருகே உள்ள கிராமத்துக்குள் புகுந்த யானை
ஈரோடு
டி.என்.பாளையம்
டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஆண் யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த யானை அத்தியூர் கிராமத்துக்குள் வந்தது. இதைத்தொடர்ந்து அந்த யானை அங்குள்ள தோட்டத்துக்குள் புகுந்து மக்காச்சோள பயிரை தின்று கொண்டிருந்தது. இதை கண்டதும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
Related Tags :
Next Story