ஆசனூர் அருகே கரும்பு லாரியை குட்டியுடன் வழிமறித்த யானை


ஆசனூர் அருகே கரும்பு லாரியை குட்டியுடன் வழிமறித்த யானை
x

ஆசனூர் அருகே கரும்பு லாரியை குட்டியுடன் வழிமறித்த யானை

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே கரும்பு லாரியை குட்டியுடன் யானை வழிமறித்தது.

கரும்பை ருசிக்கும் யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்கள் வழியாக திண்டுக்கல் -மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். இவ்வாறு கடக்கும் யானைகள் அந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றிவரும் லாரிகளை வழிமறித்து, கரும்புகளை ருசிக்கின்றன. இதற்காக அடிக்கடி தேசிய நெடுஞ்சாைலயில் யானைகள் உலா வருகின்றன.

லாரியை மறித்தது

இந்தநிலையில் நேற்று மதியம் ஆசனூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம்-புளிஞ்சூர் செல்லும் ரோட்டில் கரும்பு லாரியை எதிர்பார்த்து குட்டியுடன் ஒரு யானை நின்றுகொண்டு இருந்தது.

அப்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றிக்ெகாண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. கரும்புகளை கண்டதும் யானை குட்டியுடன் நடுரோட்டுக்கு வந்து லாரியை மறித்தது. பின்னர் கரும்புகளை துதிக்கையால் எடுத்து தின்றது. குட்டிக்கும் கொடுத்தது. இதைப்பார்த்த டிரைவர் லாரியில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.

சாலையோரம் வீசினார்

யானை குட்டியுடன் ரோட்டில் நின்று கரும்பை தின்பதை பார்த்து மற்ற வாகன ஓட்டிகளும் சற்று தூரத்திலேயே நின்றுகொண்டார்கள். சுமார் 15 நிமிடம் நடுரோட்டிலேயே யானை கரும்புகளை தின்று கொண்டு இருந்தது. அதன்பின்னர் டிரைவர் லாரியின் பின்பக்கத்தில் ஏறி கரும்புகளை எடுத்து சாலையோரம் வீசினார். இதனால் யானை சாலையோரத்துக்கு சென்று கரும்பை ருசித்தது. உடனே லாரியை டிரைவர் எடுத்துக்கொண்டு சென்றார். இருபுறமும் நின்றுகொண்டு இருந்த வாகனங்களும் செல்லத்தொடங்கின.


Next Story