தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் நின்ற யானைகளால் பரபரப்பு
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்தநிலையில் தேன்கனிக்கோட்டை அருகே மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து 3 யானைகள் வெளியேறினர். அவை தேன்கனிக்கோட்டையில் இருந்து அய்யூர் செல்லும் சாலையில் தல்சூர் கிராமத்தில் நின்றன. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு பிறகு சாலையில் நின்ற யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டவாறு அந்த பகுதியை கடந்தனர். யானைகள் சாலையில் நின்றதால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story