காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்ததாக 6 வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது- நின்ற லாரியில் கரும்பை ருசித்த யானை


காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்ததாக 6 வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. நின்ற லாரியில் இருந்து கரும்ைப ருசித்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு


காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்ததாக 6 வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. நின்ற லாரியில் இருந்து கரும்ைப ருசித்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிக பாரம் ஏற்றி வந்ததாக...

கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு மக்காசோளம் பாரம் ஏற்றிக்கொண்டு 6 லாரிகள் தனி தனியாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரிகள் நேற்று காலை ஆசனூர் அருகே உள்ள தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் சென்றபோது அதிக பாரம் இருப்பதாக கூறி வனத்துறை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அந்த வழியாக மற்ற வாகனங்கள் ஏதும் செல்லமுடியவில்லை. பஸ், லாரி, வேன், கார், சரக்கு வேன் என அனைத்து வாகனங்களும் வனச்சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

அப்போது அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை கரும்பு லாரி நிறுத்தப்பட்டு இருந்ததை பார்த்து அந்த லாரியை நோக்கி வந்தது. பின்னர் அதில் இருந்த கரும்புகளை ஒவ்வொன்றாக துதிக்கையால் இழுத்து தின்றது. இதனால் அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் காரில் இருந்த பயணிகள், குழந்தைகள் என அனைவரும் வாகனத்தை விட்டு இறங்கி ஓடினார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

சுமார் 45 நிமிடத்துக்கு பிறகு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இதனை ஒரு சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதற்கிடையே லாரிகளை தடுத்து நிறுத்தியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சோதனைசாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு அதிக பாரம் ஏற்றி வந்த லாரி டிரைவர்களை எச்சரித்து வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீரானது. வாகனங்கள் அனைத்தும் அங்கிருந்து சென்றன.

அதிக பாரம் ஏற்றி வந்ததாக கூறி லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story