நெல் பயிர்களை சேதப்படுத்திய யானை
தேன்கனிக்கோட்டை அருகே நெல் பயிர்களை யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே நெல் பயிர்களை யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
யானை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனச்சரக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்து வருகின்றன.இந்தநிலையில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு யானை நேற்று அதிகாலை ஒசட்டி கிராமத்திற்குள் புகுந்தது. இந்த யானை விவசாயிகள் பயிரிட்டிருந்த நெல் வயலுக்குள் இறங்கி பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தின. இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் டார்ச் லைட் அடித்தும், சத்தம் போட்டும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அறிவுறுத்தல்
பயிர்களை யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். யானையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஒசட்டி, கண்டகானப்பள்ளி, தாவரக்கரை உள்ளிட்ட கிராம பகுதிகளில் யானை சுற்றித்திரிவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வனப்பகுதிக்குள் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.