தாளவாடி அருகே கருப்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் தயார்


தாளவாடி அருகே கருப்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் தயார்
x

தாளவாடி அருகே கருப்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளன.தாளவாடி அருகே கருப்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் தயார்

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே கருப்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளன.தாளவாடி அருகே கருப்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் தயார்

யானை அட்டகாசம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்குகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 1 மாதமாக ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட திகினாரை, ஜோரைகாடு, கரளவாடி, மரியபுரம் பகுதியில் கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ் ஆகிய பயிர்களை சேதம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. யானையை விரட்டும் விவசாயிகளையும் ஒற்றை யானை துரத்துவதும் வாடிக்கையாகியுள்ளது.

3 கும்கிகள் தயார்

எனவே கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என வனத்துறை வாகனத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் டாப்சிலிப்பில் இருந்து கபில்தேவ், அரிசி ராஜா ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் கலீம் என்ற கும்கி யானை ஜோரைகாடு பகுதிக்கு வந்தது. இதன் மூலம் கருப்பன் யானையை விரட்ட தற்போது 3 கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'கருப்பன் யானையை பிடிக்க உயர் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளார்கள். முதலில் கருப்பன் யானையின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படும். எனவே மருத்துவகுழுக்கள் வந்தவுடன் கும்கி யானைகள் உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.



Next Story