தாளவாடி அருகே கருப்பன் யானையை பிடிக்க விடிய, விடிய காத்திருந்த வனத்துறையினர் ஏமாற்றம்


தாளவாடி அருகே கருப்பன் யானையை பிடிக்க விடிய, விடிய காத்திருந்த வனத்துறையினர் ஏமாற்றம்
x

தாளவாடி அருகே கருப்பன் யானையை பிடிக்க விடிய, விடிய காத்திருந்த வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர். இதனால் கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே கருப்பன் யானையை பிடிக்க விடிய, விடிய காத்திருந்த வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர். இதனால் கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

கருப்பன் யானை

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை கருப்பன் யானை தினமும் வனத்தை ஒட்டி உள்ள கிராமத்துக்குள் புகுந்து வாழை, மக்காச்சோளம், கரும்பு, தென்னை பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து தோட்டத்துக்கு தினமும் விவசாயிகள் காவலுக்கு சென்று வந்தனர். அப்போது காவலுக்கு சென்ற 2 விவசாயிகளை கருப்பன் யானை தாக்கி கொன்றது.

தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுடன் விவசாயிகளை கொன்று வரும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

சிக்கவில்லை

இதையடுத்து கருப்பன் யானையை பிடிக்க அரிசி ராஜா, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் 4 வன கால்நடை டாக்டர்கள் மற்றும் 150 வனப் பணியாளர்கள் ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக நேற்று முன்தினம் இ்ரவு மரியபுரம், ஜோரகாடு மற்றும் ரங்கசாமி கோவிலுக்கு செல்லும் வழியில் விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் ஒற்றை கருப்பன் யானை நேற்று முன்தினம் இரவு சிக்கவில்லை. இதனால் வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர். இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக வனப்பகுதிக்குள் சென்று கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி கருப்பன் யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தாளவாடி மலைப்பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால் வன ஊழியர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்தனர்.



Next Story