பாலக்கோடு அருகே ஏரியில் ஆனந்தமாக குளித்த யானைகள்
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு வனப்பகுதியில் உள்ள யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. அந்த யானைகள் விவசாய நிலங்களில் பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன. இந்தநிலையில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 குட்டிகள் உள்பட 5 யானைகள் மணியகாரன்கொட்டாய் கிராமத்துக்குள் புகுந்தன. அவை அங்குள்ள பெரிய ஏரியில் முகாமிட்டன. மேலும் ஏரியில் படுத்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்தமாக குளித்தன.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர். மதியம் வரை ஏரியில் முகாமிட்டிருந்த யானைகள் அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றன.
Next Story