யானை தாக்கி தொழிலாளி படுகாயம்


யானை தாக்கி தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கூலினூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45).. கூலித்தொழிலாளி. இவர் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாப்ரானப்பள்ளி மற்றும் மாரச்சந்திரம் கிராமத்திற்கு இடையே உள்ள கிருஷ்ணப்பா என்பவரது நிலத்தில் பட்டி அமைத்து ஆடுகளை மேய்த்து வருகிறார். வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் கூட்டத்தில் இருந்து ஒரு யானை பிரிந்து மாரச்சந்திரம் பகுதிக்கு வந்தது. அப்போது வனப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டு இருந்த கிருஷ்ணனை யானை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story