மின்சாரம் தாக்கி இறந்த யானையின் உடல் பிரேத பரிசோதனை


மின்சாரம் தாக்கி இறந்த யானையின் உடல் பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி இறந்த யானையின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வெங்கடப்பன் கொட்டாய் மேல்காடு என்ற இடத்தில் மாந்தோப்பில் ஆண் யானை ஒன்று நேற்று முன்தினம் காலை இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மின்சாரம் தாக்கியதில் யானை இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று சத்தியமங்கலம் வன கால்நடை டாக்டர் சதாசிவம் தலைமையிலான குழுவினர், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன் முன்னிலையில் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் யானையின் உடலை அங்கேயே பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தனர். அப்போது ராயக்கோட்டை வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி, வனவர்கள் சரவணன், செந்தில்நாதன், வன காப்பாளர் புட்டுகான் மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.


Next Story