ஒகேனக்கல்லில் சாலையை கடந்து சென்று தொட்டியில் தண்ணீர் குடித்த யானை-வாகனங்களை நிறுத்தி வனத்துறையினர் பாதுகாப்பு


ஒகேனக்கல்லில் சாலையை கடந்து சென்று தொட்டியில் தண்ணீர் குடித்த யானை-வாகனங்களை நிறுத்தி வனத்துறையினர் பாதுகாப்பு
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல் வனப்பகுதியில் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது மழை பெய்யாத காரணத்தால் வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றன. இந்தநிலையில் ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஆண் யானை ஒன்று நேற்று தண்ணீர் தேடி வெளியேறியது. அந்த யானை ஒகேனக்கல்-பென்னாகரம் சாலையை கடந்து, சாலையோரம் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் குடித்தது. யானையை கண்காணித்து வந்த ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான வனக்குழுவினர், யானை சாலையை கடக்க வசதியாக அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தினர். தொடர்ந்து யானை தண்ணீர் குடித்து விட்டு வனப்பகுதிக்குள் செல்லும் வரை அவர்கள் வாகனங்களை நிறுத்தி வைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் யானை சென்ற பிறகு ஒகேனக்கல்-பென்னாகரம் சாலையில் போக்குவரத்து சீரானது. கோடைக்காலம் தொடங்கும் முன்பே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விலங்குகள் வெளியேறுவதை தடுக்க வனப்பகுதியில் கூடுதல் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story