வள்ளி திருக்கல்யாணத்தில் யானை விரட்டும் நிகழ்ச்சி
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் பங்குனி பெருவிழாவையொட்டி வள்ளி திருக்கல்யாணத்தில் அரசலாற்று கரையில் யானை விரட்டல் நிகழ்ச்சி நடந்தது. இதில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கபிஸ்தலம்:
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் பங்குனி பெருவிழாவையொட்டி வள்ளி திருக்கல்யாணத்தில் அரசலாற்று கரையில் யானை விரட்டல் நிகழ்ச்சி நடந்தது. இதில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.வள்ளி திருக்கல்யாணம்
தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழாவில் வள்ளி கல்யாணம் நடைபெறுவது வழக்கம். வேடர்குல அரசின் நம்பிராஜனின் வளர்ப்பு மகளான வள்ளியை மணம் செய்வதே வள்ளி திருக்கல்யாணமாக ஆண்டுதோறும் நடக்கிறது. அப்போது முருகப்பெருமானிடம் கோபித்துக்கொள்ளும் வள்ளியை விநாயகப்பெருமான் யானை உருவத்தில் வந்து விரட்டி பயமுறுத்தினார்.
யானை விரட்டும் நிகழ்ச்சி
இந்த வரலாற்று நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் வள்ளி திருக்கல்யாணத்தில் யானை விரட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.அதன்படி நேற்று அதிகாலை சுவாமிமலை அரசலாற்றில், தினைபுனம் காத்த வள்ளியை விநாயக பெருமான் யானை உருவத்தில் வந்து விரட்டும் காட்சியும், பின் முருகப்பெருமான் சுய ரூபத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதற்கான ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.